கோடைகாலம்
கோடைகாலம்
மங்கையர் முகத்தில் தெரியும் வியர்வை துளி
மலர்களின் பனித்துளிக்கு உவமை சொல்லும்
மறந்துபோன மரங்கள் நினைவுக்கு வரும்
மாந்தர்களை வரவேற்க வீதியெல்லாம் புங்கை மரங்கள் பூக்கள் தூவும்
மா பலா வாழை முக்கனிகள் சங்கமமாகும் சொந்தங்கள் வரவால்
மான்களின் கூட்டம் போல் துள்ளி விளையாடி விடுமுறையை கொண்டாடும் சிறார்கள்
மதிகெட்டு போயிட்டோம் மரங்களை மயத்திட்டோம் புலம்பல் புவியெல்லாம் பரவும் ....
கோடையின் தீராத தாகத்துடன் ந ஜானகிராமன்