வான மழை நீ யெனக்கு

வாரா விருந்தாளியாய் - நீ
வரமாய் வருவாயே !
வறட்சியை போக்கிடவே - நான்
வசந்தத்தில் கால் நனைக்க !

வறண்டு போன நிலங்களுமே - தன்
வாய்திறந்து காத்திருக்க !
தாகம் தீர்க்க வாராயரோ - நின்
தயாள குணமும் காட்டாயோ !

நிலத்தடி நீரும் கூட -
நினைத்தபடி கிடைப்பதில்லை !
வான மழை நீ யெனக்கு -
வரமாய் வந்துவிடு !

ஊற்று தோண்டிய ஆறும் கூட -
ஊரைவிட்டே போனதுவே - என்
உள் மன ஆழ்மனமோ -
உன்னை மட்டும் தேடுவதேன் ?

வறுமை போக்க வந்துவிடு !
வான மழை நீ யெனக்கு !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (28-Aug-16, 5:00 pm)
பார்வை : 151

மேலே