என் குறும்புக்கார குயில்
என் குறும்புக்கார குயில் .....
என்
அவளை காண
படி மேல் ஏறி சென்றால் - எதையோ
படிக்கிறாள் நிலவை கண்டு....
அவள் அருகில் சென்றால்
தவறை தவறி
தவறாக சொல்லிவிடுகிறேன்
நீ அழகானவள் என்று......
சரி என்று எழுந்தால்
சரிந்து விடுகிறேன்
அவள் சிரிப்பை கண்டு.....
அவளிடம் சென்று
நகை என்றால்
நகையை காட்டுகிறாள்
புன்னகையை மறந்து
என் குறும்புக்கார குயில் .....
இன்று
நானும் என்னவளும்
காதலை
இசைக்கிறோம் இசையால்.....
-ஜ.கு.பாலாஜி.