அன்னையின் கடிதம்
அவள் எழுதும் கடிதத்தில்
இலக்கியம் இருக்காது
இதயம் இருக்கும்
இலக்கணம் இருக்காது
சந்திப் பிழை இருக்கும்
இரட்டைக் கொம்பிற்கு
ஒற்றைக் கொம்பிருக்கும்
கொச்சை மொழியில் அவளின் நாலு வரியில்
பச்சை வயல் மனசு விரிந்திருக்கும்
எப்ப வருவே மவனே என்ற கேள்வி
ஒவ்வொரு கடிதத்திலும் இருக்கும்
அன்னையோ ஊரில்
அக்கரையில் நான் ....
----கவின் சாரலன்