நீ இல்லாத நான்

நிலவு
இல்லாத
இரவு!

மலர்
இல்லாத
சோலை!

இலை
இல்லாத
மரம்!

சிறகு
இல்லாத
பறவை!

நீர்
இல்லாத
நதி!

அலை
இல்லாத
கடல்!

தாய்
இல்லாத
சேய்!

உயிர்
இல்லாத
உடல்!

இவைகளை
போல
இனி
நீ
இல்லாமல்
நானும்?

எழுதியவர் : பர்வதராஜன் மூ (30-Aug-16, 12:53 am)
Tanglish : nee illatha naan
பார்வை : 122

மேலே