ஒரு மயிலிறகால்
மென்மையின் மேன்மையை
அறிந்தவன் நான் ..
மேன்மையிலும் மேன்மை
உன்வருடல் தான் ..
தழுவிடும் நேரத்தில்
தந்திடும் சுகமே ..
மயிலிறகாள் உந்தன்
மேனியின் தீண்டலே ..
குளிர்ந்திடும் தருணத்தில்
அணைத்திடும் அந்நிமிடம்
அளித்திடும் அனலை
மறந்திடும் சூழலும்
மகிழ்ந்திடும் மனமும் ...
நோயுற்ற நேரத்தில்
காயமுற்ற வேளையில்
அருமருந்தாய் அமையுமே
மயிலிறகின் தீண்டலாய்
உந்தன் வருடலும் ....
வருத்தங்கள் வழிந்து
வதைபடும் நெஞ்சிற்கு
இசைபாடும் இதயமாகி
இன்பத்தைத் தந்திடுமே
இரக்கமுடன் தொடுவதால் ...
உடைந்திட்ட உள்ளத்தால்
மடைதிறந்த வெள்ளமாய்
பெருக்கெடுக்கும் கண்ணீரை
துடைத்திடும் உன்விரலும்
உருவெடுக்கும் வருடலும்
களைந்திடும் நெருடலை ...
இடிந்திட்ட இதயத்தால்
வடிந்திடும் துக்கத்தை
தடுத்திடும் நோக்குடனே
வகுத்திடும் வழிமுறையாய்
தழுவிடும் மேனியால்
கழுவேற்றும் கவலைகளை
பதிவேற்றும் பக்கங்களை
வருடலின் சுகங்களை
மயிலிறகே உன் தீண்டலால் !!!
பழனி குமார்