குடும்பம்-னு பேரு

பறிவாரு, இங்க வாடாச் செல்லம். எங்கடா போயிட்ட?
@@@@

@@@@
யாரப் பாட்டிம்மா பறிவாரு, பறிவாரு-ன்னு கூப்படறீங்க?

@@@@
@@@@

வாடி பொன்னி, சேலத்திலிருந்து நம்ம ஊருக்கு நாலு

வருசத்துக்கப்பறம் வந்திருக்கற எங்

கடசி மவன்

கண்ணப்பன் வந்திருக்கறான்.

அவனோட ஒரே பையம்

பேருதாம் பறிவாரு.. நானுங்

கண்ணப்பங்கிட்டக் கேட்டன்:

“என்னடா கண்ணப்பா உம் பையனுக்கு

பறிவாரு-ன்னு

பேரு வச்சிருக்க. அந்தக் காலத்திலெ

கெணத்திலிருந்த

வெவசாய நெலத்துக்கு தண்ணி பாச்ச

பெரிய வடத்தில

பறியைக் கட்டி ரண்டு காள மாடுங்களப்

பூட்டி தண்ணி

எறைப்பாங்க. அந்த பறிங்கற

வார்த்தையையும், காஞ்ச

தோல வாருன்னு சொல்லுவாங்க.

அந்த ரண்டு

வார்த்தைங்களயும் சேத்து எம்

பேரனுக்கு ’பறிவாரு’-ன்னு

பேரு வச்சிட்டயான்னு கேட்டென்.

அவஞ் சொன்னா.

"இல்லம்மா எம் பையம் பேரு தமிழ்ப்

பறி இல்ல. இந்தி

வார்த்தை ‘பறிவாரு”-ன்னு சொன்னாங்

கண்ணப்பன்.
@@@@
@@@@
அது சரி பாட்டிம்மா, பறிவாருங்கற

அந்தப் பேருக்கு

என்ன அர்த்தம்னு மாமங்கிட்டக்

கேட்டீங்களா?

@@@@
@@@@
ஏண்டி பொன்னி, என்னப்பத்தித்தான்

உனக்குத்

தெரியுமே. எந்தப் பேரா இருந்தாலும்


அதுக்கு அர்த்தம்

தெரிஞ்சுக்காம விடமாட்டென்.

கண்ணப்பஞ்கிட்டக் கேட்டென்.

“பறிவாருக்கு அர்த்தம் தெரியாதும்மா.

அசோக சக்கரவருத்தியப் பத்தி

தொலைக்காட்சி பொட்டில ஒரு

படம் பாத்தேன். அதுல ’பறிவாரு’ன்னு

ஒரு வார்த்தையச் சொல்லுவாங்க.

அந்த வார்த்தய உம் பேரனுக்குப் பேரா

வச்சுட்டேன்”ன்னு சொன்னான்.

”பிள்ளைங்களுக்குப்

பேரு வைக்க ஒரு இந்தி வார்த்தையா

இருந்தாப் போதும்மா. அந்த

வார்த்தைகு என்ன அர்த்தம்னு

கவலப்படத் தேவையில்லை”-ன்”னும்

சொன்னாங் கண்ணப்பன்.
@@@@@
@@@@@
பாட்டிம்மா, நானும் அந்தத் தொடரப்

பாத்த்திருக்கறேன். ’பரிவார்’-ங்கற

வார்த்தயத்தான் நீங்க ‘பறிவாரு’-ன்னு

சொல்லறீங்க. ‘பரிவார்’-ன்னா

‘குடும்பம்’-ன்னு அர்த்தம்

பாட்டிம்மா. எங்க பக்கத்து வீட்டு இந்தி

ஆசிரியர்கிட்ட அந்தப் பேருக்கான

அர்த்தத்தை நாங் கேட்டுத்

தெரிஞ்சிட்டேன்.
@@@@
@@@@
என்னடி பொன்னி அநியாயம். பெத்த

பிள்ளைக்கு ‘குடிம்பம்’-ன்னா பேரு

வைக்கறது?
@@@@
@@@@@

எல்லாம் அந்த சினிமாவாலே வர்றது.

சினிமாவிலெ நடிக்கற ஆளுங்க,

அவுங்க நடிக்கற படத்திலெ

அவுங்களுக்குள்ள பேரெல்லாம் இந்திப்

பேருங்களா

இருக்குது பாட்டிம்மா. நம்ம

தமிழங்கதாம் மொதமொதல்ல ஒரு

நடிகரை முதல் அமைச்சராக்கி

வரலாறு படச்சிட்டோமோ. என்னோட

அம்மா அப்பாவுக்கு கல்யாணம் ஆன

வருசத்திலிருந்து இன்னிக்கு

வரைக்கும் தமிழ் நாடே

சினிமாக்காரங்க கையில தானே

இருக்குது. இனி எதிர்காலத்திலும்

சினிமாக்காரங்கதான் ஆட்சி

நடத்துவாங்க. நாம என்ன

செய்யறது பாட்டிம்மா. தமிழ வளக்க

வேண்டிய தமிழ் எழுத்தாளர்கள்,

தமிழாசிரியர்கள், தமிழ்ப்

பேராசிர்யர்களே இந்திப் பெயர்

மோத்திலெ இருக்கறாங்க. நம்ம தமிழ்

மொழிக்கு கெட்ட காலம் 1950க்கு

முன்னாடியே “டவுன் பஸ்”ன்னு ஒரு

படம் வெளியானபோதே

தொடங்கிருச்சுன்னு எங்கப்பா

சொன்னாரு. இனி ஆறு கோடி

மக்களுக்கு மேல பேசும்

நம்ம செம்மொழியை அந்தக்

கைலாசநாதனே வந்தாலுங்

காப்பாத்த முடியாது பாட்டிம்மா.
@@@@
@@@@
நாம என்னடி செய்யறது பொன்னி. கலி

முத்திப் போச்சுடி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிச் சொற்களின் பொருள் அறிய. எம் மொழியையும் நான் குறை சொல்லவில்லை. தமிழர்களின் இந்திப் பெயர் மோகத்தைச் சுட்டிக்காட்டவே பெரும்பாலான எனது படைப்புகள். சிறுபான்மையினராக இருக்கும் நரிக்குறவர்களின் வாகிரிபோலி மொழியைக்கூட நான் குறை சொல்லமாட்டேன். மொழியியல் பாடமும் படித்தவன் நான். இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு சுமார் 37 ஆண்டுகள் மொழியியல் பாடமும் நடத்தியவன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : மலர் (30-Aug-16, 11:53 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 313

மேலே