திகைத்து நிற்கின்றேன்
கறுத்த கண்ணாடி,
நிமிர்ந்தநிலைப் பார்வை,
வனம் நிறைந்த மலர்கள்,
வாலிப வனப்பு முறுக்கிய நின் மிடுக்கு,
என் பார்வைக்காகவே கொழுத்திப்போட்ட நெருப்பு,
அத்தனையிலும் பசை ஒட்டப்பட்ட என்
பாதியையே கண்ணுற்றேன்.
வெறுப்பேற்ற முடிவு செய்திருக்கின்றாய்,
என்ன செய்வது, கலவரத்துடன்னேயே
திகைத்து நிற்கின்றேன்.
இத்தனை நிறைந்த அழகுக்கு
எதற்க்காக நான் என்று புரியாமலே.