உண்மையை சொல்லு
உண்மையை சொல்லு
மறந்தேதான்
போனாயா.....?
இல்லை மறந்தது
போல
கற்றுக்கொண்டாயா
நடிக்க......?
நீரடித்து
நீர்
விலகாது
இது..... நீண்டகால
பழமொழி......நம்மை
மறந்து
நாம் இங்கில்லை.....
இது
அழகிய காதலின்
அழகான
விதி.......!!
வண்ணங்கள் இல்லாமல்
வானவில்
ஏது....?
உன் எண்ணங்கள்
இல்லாமல்
வாழ்க்கை ஏது?
தீபமென்றால்
உன்முகம்தானே
கண்முன்னே
ஒளிரும்......
உச்சி வெய்யிலும்
குளிரடிக்குமே
உன் முத்தம்
வாங்கியே......!!
எந்தன் அன்பே
எந்நாளும்
என்னை ஆளும்
உந்தன்
அன்பு.....ஆயுளுக்கும்
வேண்டுமடி......!!!
ஊன் உறக்கம்
தொலைத்தே
உன் அன்பில்
திளைத்தேன்.....
இன்று
ஊருலகமறியாத
தேசத்தில்
என் நேசம்
மறந்து......போனாயே......!?!?!
என் காதலின்
சின்னம்
என்னவள்
எண்ணம் மட்டுமே......
சின்னங்கள்
அழியும்..... எண்ணங்கள்
என்னை
அழித்தாலே
அழியும்......!!!!!!!!!!!