அண்ணனுக்கு இந்த தங்கையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.....🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐😊😊😊😃😃🌷🌷🌷🌷🌷👑👑👑🎁🎁🎁🎁🎁🎈🎈🎈🎉🎉🎉
எல்லாம் கிடைக்கட்டும்
எண்ணியது நடக்கட்டும்
எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்கட்டும்
என் அண்ணனுக்கு.....
சண்டை போட்டுக் கொள்வோம்
அடித்துக் கொள்வோம்
வாக்கு வாதம் செய்வோம்
ஆனால் விட்டு விலகமாட்டோம்
நாங்கள் அண்ணன் தங்கை...
எல்லா அண்ணனும் தங்கைக்கு
இன்னொரு தகப்பன் தான்...
அடிப்பதில் தந்தை ஆகிறார்
அன்பு காட்டுவதில் அன்னை ஆகிறார்...
என் அண்ணன்
எனை திட்டிக்கொண்டே இருப்பார்கள்
இது கூடவா தெரியல
என்று
அதில் அவர்கள் பாசம் அதிகம் இருக்கிறது...
அண்ணனுக்கு என்ன என்றால் என் தங்கை
எல்லா சாதாரண பெண்கள் போல் இல்லாமல்
எல்லாம் கற்றுத் தெரிந்திருக்க வேண்டுமென்று
நிறைய கற்றுத் தருவார்கள்...
அதே போல் செலவு செய்யும் பொழுதும் சரி
எனக்கு என்ன வேண்டும் என்பதிலும் சரி
என்னை கேட்டு
தெரிந்து கொள்ளாமலேயே
மிகச் சரியாக அதை
நிறை வேற்றிவிடுவார்கள்
அண்ணா
எனக்கு நிறைய பரிசுகள்
வாங்கி கொடுத்திருக்கிறார்...
எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தவை...
எதுவும் என்னிடம் கேட்டு விட்டு வாங்கியதல்ல...
எல்லாமே இன்ப அதிர்ச்சிகள்(Surprise) தான்...
MP3 Player, டைரி,
அக்னி சிறகுகள், ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க, கைபேசி, ...................................
இன்னும் நிறைய நிறைய
மிகவும் தொலை நோக்கு பார்வை அண்ணனுக்கு.....
ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்று வினவினால்
நீயே தேடி கண்டு பிடித்து படி அப்பொழுது மறக்காது என்பார்.
நான் திறு திறுவென்று முழிப்பதை பார்த்து
கொஞ்ச நேரத்தில் அதற்கான
தீர்வை அண்ணனே விளக்குவார்...
நிறைய இடங்களுக்கு அழைத்துச் செல்வார் அண்ணன்
எதுவும் நான் சொல்லாமலேயே
என் சோகம்
அண்ணன் கண்ணில்
ஒற்றை துளியை தந்தது
ஆம் கல்லூரியில்
ஒரு போட்டியில்
அடைந்த வெற்றி
இல்லாமல் போனது
நான் சிறிது வருத்தப்பட்டுக் கொண்டிருக்க
என் அண்ணன் கண்ணில்
ஒற்றை துளி
அதை உடனே துடைத்திட்டார்
அந்த தருணம் என் வாழ்வின்
மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.....
எனக்காக அப்பா அம்மா
கிட்ட நெறையா பேசி இருக்காரு...
எனக்கு எப்பயுமே நல்லதே
நினைப்பாரு அண்ணன்
என் தாயுமானவர்
சண்டை போட்டு
கோபமாய் சென்றாலும்
இருவரும் ஒருவரை ஒருவர்
விசாரித்துக் கொள்வோம்
எங்கள் சண்டை ஓர் நாள் கூட
தாக்கு பிடிக்காது...
நாங்கள் பாசமலர் போல்
பாசத்தை கொட்டியதில்லை
எந்த நேரமும் சண்ட கோழி போல் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம்.....
அதிகம் பாசம் உள்ள
இடத்தில் தானே விளையாட்டு இருக்கும்
சண்டை இருக்கும்
கோபம் இருக்கும்...
வாழ்வின் அர்த்தத்தில்
அண்ணன் தங்கை பாசம் அதை
வார்த்தையில் சொல்லி முடிக்க முடியா நெகிழ்ச்சிகள்
பாதை மாறலாம்
பயணம் மாறலாம்
பாசம் மாறாது
அதன் இலக்கு மாறாது
பார்க்கும் கண்கள் இரண்டாகினும் பார்வை ஒன்றே....
கோபம் பாசம் இரண்டாகினும்
வெளிப்படுவது அன்பே.....
தந்தைக்கு பின்
கை பிடித்து நடக்க வைத்த இன்னொரு தந்தை
தாயை போல் தடுக்கி விழுந்தால் விரைந்து தூக்கி விட்ட
இன்னொரு தாய்...
என் முதல் தோழன்....
என் அண்ணன்...
அண்ணனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
தமிழ் போல் செழித்து நீ வாழ் அண்ணா.....
உன் அன்பெனும் நிழலில் நான் உன்னுடன் எப்பொழுதும் இருப்பேன் அண்ணா...
காலங்கள்
எல்லைக்கோடு
அண்ணன் தங்கைக்கு இல்லை...
உலகில் மிகவும் உயர்ந்த உறவு
இந்த பந்தமே
காலங்கள் கடந்து வாழும் சொந்தமே
நிறைய பாசமாக பேசி விட்டேன்...
எப்பொழுதும் போல் விவாதம் இல்லை...
எங்களின் சண்டை
எங்களின் பாசம்....
அது அன்பை அதிகரிக்கும் அற்புத மந்திரம்...
அது நெருப்பின்
மீது பட்ட நீர் போல்...
(சண்டை போட்டுக் கொள்ள வேண்டுமென்றால்
இன்னுமா சாப்டல அண்ணா...
அந்த சிஸ்டம்ல இருந்து எழுந்து வந்து சாப்டறியா?
நான் சாப்டுக்கறன் நீ போய்டு
ஒழுங்கா சமைக்கறது எப்படினு பாரு...
உண்மைய சொல்லு
உனக்கு எதுனா சமைக்க தெரியும்)
ஊற்றெடுக்கட்டும் வளங்கள்
பரந்து கிடக்கட்டும் அறிவு
வெற்றிகள் குவியட்டும் வாழ்வில்
வசந்தம் வீசட்டும்
வெளிச்சம் ஒளிரட்டும்
நித்தமும் உன் பொழுதாகட்டும்
நொடிகள் உனது படிகளாகட்டும் அண்ணா....
என்றும் இன்பம் உன் வாழ்வில் பெருகட்டும் அண்ணா...
உனக்கு இந்த தங்கையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.....
Wish You Happy Birthday Bro...🎂💐💐💐?👑?🌷🌷🌷👑👑👑😃😃😃😃😃🎁🎁🎁🎁🎁
உன் அன்பில் என்னாளும் வாழும்.......
~ உன் தங்கை பிரபாவதி வீரமுத்து