நண்பா நம் வீட்டிற்கு வா -3

நண்பா, நம் வீட்டிற்கு வா
நீ படும் வேதனை கண்டால்
பாலை வானமும் கண்ணீரில் மிதக்கும்.....
நீயோ அங்கு இருக்க
நானோ இங்கு இருக்க
இணையம் இருந்தும்
இனைய வழி இல்லை....
ஏக்கம் உள்ள உயிர் நான் இங்கு இருக்க - வாழ
ஏக்கம் இல்லாமல் நீ அங்கு இருக்க
யார் செய்த சதியோ....
நண்பா,
உடலால் வந்த ஊனம் மனதால் போகும்
மனதால் வந்த ஊனம் எதனால் போகும்?
மாற்றம் ஏமாற்றம்
ஏன் இந்த மாற்றம்....?
மாற்றம் தடுமாற்றம்
ஏன் இந்த தடம் மாற்றம்....?
நண்பா,
உன்னைக்கான என் இதயம் கூட
முறை மாறி நொடிக்கு
72 முறை துடிக்கின்றது...
மின்னலாய் வா...!
ஒழிந்து கொள்ளும் நாட்டை விட்டு
ஒளிரும் நாட்டிற்கு வா...!
நண்பா நம் வீட்டிற்கு வா.....!
உன் வரவை எதிர்பார்க்கும்
தாயும், தாய் நாடும் கலந்த நட்பு....!
-ஜ.கு.பாலாஜி.