பல விகற்ப பஃறொடை வெண்பா வித்தகன்போல் வெண்பாக்கள் நித்தமும்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
வித்தகன்போல் வெண்பாக்கள் நித்தமும் பித்தனைப்போல்
தந்தாலும் அத்தனைக்கும் மொத்தமாய் செங்கமல
வாய்திறந்து தித்திக்கத் தேன்பாகாய் தந்திடுவாள்
முத்தமொன்றி ருந்தேனே வெள்ளி முளைத்திரு
வேளையிலே வஞ்சியவள் என்னருகில் வந்துவிட்டாள்
தந்திடுவாள் என்றெண்ணி மெய்மறந்து நான்நிற்க
தந்தாள் மகராசி "பூ"