வருத்தத்திற்குரிய வாக்காளபெருங்குடி மக்களே
[பெண் ]அம்மா ,அய்யா[ஆண் ] ஆட்சிகளை
தலையில் வைத்துக்கொண்டு
ஆடிய எனதருமை
வாக்காள பெருங்குடி மக்களே .....
உங்களுக்காக வருந்துகிறேன் ...
வெளிநடப்பு செய்வதும் ,உள் நடப்பில்
புகழ்வதும் ...மா.. ஆ ஆய் [ஆய் ]ஆனது
சட்டசபை .....
ஆளுக்கொரு போராட்டமென ஆட்டம் போட்ட
காட்சியெல்லாம் அடங்கிவிட்ட மயமென்ன ....
பேச்சிக்கு எதிர் பேசி ..
ஆட்சிக்கு பேரம் பேசி ..
அடங்கிவிட்ட மௌனிகளிடத்தில்
அடுத்த அடுத்த தேர்தல்களிலும்
கவனமாக இருங்கள்
சட்டமன்றம் அவ்வப்போது
சத்த மன்றமாகிவிடுகிறது
சபா நாயகர் பிரிவு 2 ன் கீழ்
திட்டங்களை அமலாக்குகிறார்
ஆளுங்கட்சி 1 ஆண்ட கட்சி 2
மக்களாட்சி நின்று
வேடிக்கை பார்க்கிறது
காலாவதியாகிய ஆளுநர் பதவி
....ஆளுநர் என்னும் நான்....
என்ற அதிகாரத்தோடு
முடித்துக்கொண்டது
ஊருக்கொரு உத்தமரை
தேர்ந்து எடுத்ததுபோல்
வாக்குரிமைக்கு
வண்ணமை பூசிவிட்டு
அமர்ந்துவிட்டோம்
கண்ணீர் துடைக்க வருவார்கள்
என நினைத்து காத்திருந்த நம்முன்
கண்துடைப்பு செய்து ....
செய்தி செய்து விட்டு போன
அரசியல் நடிகர்கள் ....
எனதருமை,
வருத்தத்திற்குரிய
வாக்காளபெருங்குடி
மக்களே....
உங்களுக்காக வருந்துகிறேன்
ஆறாண்டு திட்டங்களை
நிறைவேற்றிவிட்டு
அடுத்த ஆட்சியை
பிடிக்க காத்திருக்கும்
நரிகளை ....தூர விரட்ட
அறியாமையை தூர விரட்டுங்கள்
- சுப்பிரமணிய கார்த்திக்