என்னை பற்றி நான்-3
தோழர்களே,
இனிய காலை பொழுதில் இந்த எழுத்து வலைதளத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த கட்டுரையும் என்னை பற்றியது தான். காத்திருப்பதில் தவறில்லை. ஆனால் காக்க வைப்பது தான் தவறு என்ற கொள்கையை உடையவன் நான். இது ஏன் தந்தை எனக்கு கூறிய பாடம். பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்பார்கள். அதன் அர்த்தம் விரைவாக செயல்படுவதை பற்றியது மட்டும் அல்ல. விவேகமாக செயல்பட வேண்டும் என்பதும் தான்.
முந்தய முதுமொழியின் விளக்கம் இரு வகைப்படும். முதலாவது பந்தியில் முந்தினால் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட முடியும். பந்தியில் பின்வாங்கி செயல்பட்டால் எதிரியை சோர்வாக்கி வெல்ல முடியும். இரண்டாவது பந்தியில் கைகள் முன் பக்கமாக சென்று உணவை வேகமாக எடுக்க முயற்சிக்கும். இதன் பொருள் வேகமாக அல்லி சாப்பிட்டால் நிறைய உணவை சாப்பிட முடியும் என்பதே.
அதே போல் படையில் பிந்துவது என்பது நம்முடைய கைகளை எவ்வளவு வேகமாக பின்னோக்கி இழுத்து வாளை முன்னோக்கி பாய்ச்சுகிறோமோ அந்த அளவுக்கு நம்மால் எதிரியை எளிதாக வீழ்த்த முடியும். இது விவேகத்தை குறிப்பது. இந்த இரண்டாவது விளக்கம் தான் உண்மையான விளக்கமும் கூட. ஆனால் நம்மவர்கள் தவறாக விளங்கி வைத்துக்கொண்டு சாப்பாட்டை பற்றியே பேசுகிறார்கள்.
இந்த பழமொழி படைவீரனை மெருகேற்றுவதற்காக நமது மூதாதையர்கள் கூறியது. அதே போல் தான் இன்றய காலமும். எவ்வளவோ வேலைகள் நாம் செய்கிறோம். ஆனால் சரியாக தான் செய்கிறோம் என்று மிக சரியாக யாராலும் கூற முடியாது. ஏனென்றால் தேவையில்லாத இடங்களில் அவசரமும் தேவையான இடங்களில் சோம்பேறித்தனமாகவும் செயல்படுவதே காரணம்.
நாம் ஒருவரை சந்திப்பதாக கூறினால் அவர் கொடுக்கக்கூடிய கால அவகாசத்துக்குள் சந்திக்க வேண்டும் என்பதற்காக நாம் அவசரம் காட்டுகிறோம். ஆனால் நம்மை பிறர் சந்திக்க வேண்டும் என்று கூறினால் நாம் அசட்டுத்தனம் காட்டுகிறோம். கேட்டால் அவருக்கு முன்பாக நாம் சென்றால் நமக்கு கௌரவக்குறைச்சல் என்று கூறுகிறோம்.
எப்பொழுது நாம் பிறருக்கு மரியாதையை அளிக்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுது நமக்குரிய மரியாதையும் நம்மை தேடி தானாக வரும். நம்முடைய அசட்டுத்தனத்தால் எவ்வளவோ வாய்ப்புகள் நமக்கு வர வேண்டியிருந்தும் நம்மை வந்தடையாமல் திரும்பி சென்றிருக்கும். நம்முடைய வேலையில் விவேகமும் தேவை. நமக்கு ஒரு வேலை எளிதானாக இருந்தாலும் அதை தெளிவானதாக பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செய்யும் போது தான் அது சிறப்பானதாக அமையும்.
நீங்கள் நினைக்கலாம், இந்த ஒரு சின்ன வேலையை நாம் ஏன் சிறப்பானதாக செய்ய வேண்டும் என்று ? ஆனால் நீங்கள் சிறு சிறு வேலையை சிறப்பாக செய்யும் போது, பெரிய வேலை தானாக தேடி வரும். அப்பொழுது உங்களால் அதையும் சிறப்பாக செய்யக்கூடிய பக்குவத்தை பெற்றிருப்பீர்கள். இது ஒரு சிறந்த உதாரணமும் கூட.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் பகிரவும்.