இல்லத்தரசி

இல்லங்களை வழிநடத்தும்
இணையிலா மகராசி !
இல்லங்களில் சுடர்விடும்
ஒப்பற்ற ஒளிவிளக்கு !
தளர்ந்திட்ட வயதிலும்
தளராத மனதுடையாள் !
முப்பொழுதும் குடும்பத்தை
நினைத்திடும் மங்கையவள் !
இல்லறமெனும் யாழினை
மீட்டிடும் இசைவாணி !
குடும்பத்தை குதூகலமாய்
வைத்திருக்கும் குலவிளக்கு !

இறுக்கமிகு சூழலையும்
இன்பமிகு நிலையாக்கி
இதயங்களை மகிழ்விப்பாள் !
தத்தளிக்கும் வேளையில்
கொந்தளிக்கும் மனங்களை
குளிர்விக்கும் நெஞ்சமவள் !36
வாழ்க்கை எனும் படகிற்கு
துடுப்பாக செயல்பட்டு
துன்பங்கள் துயரங்களை
எதிர்கொண்டு இயக்குபவள்
இல்லத்தரசி !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Sep-16, 9:37 pm)
பார்வை : 604

மேலே