உருகும் மெழுகு தந்தை

அன்பிற்கு அகராதியாம் அன்னை!
அரவணைப்பிற்கும் அவள் பெயர் தான்!
ஒளிரும் வெளிச்சத்தையே உலகம் பார்க்கும்
உருகும் மெழுகை பார்ப்பார் யார்?
உருகும் மெழுகு தான் தந்தையரும்
உருகி முடித்த பின்னே இதை உலகறியும்!
ஆழமான அன்பு அளவில்லா அர்ப்பணிப்பு
பட்சமில்லா பாசம் வேஷமில்லா பொறுப்பு
அனைத்தையும் மறைத்திடுவார் கண்டிப்பு எனும் ஓர் முகமூடியில்..
#தந்தை ❤