ஆனந்தமாக நானிருந்த நேரம்

ஆனந்தமாக நானிருந்த நேரம் இதமாக என் அருகில் நீ வந்து அமர்ந்த நொடிகள் யாவும் நனவா அல்லது கனவா ? என்ற கேள்வியை நானே என்னிடம் கேட்கிறேன்.

கடலோரம் சென்று அலையோடு பேசி ஆங்காங்கே காதல் ஜோடிகளை கண்டு உன்னை நினைத்து கரையோரங்களில் கனவு காணும் மனிதனாக நின்றுக்கொண்டிருந்தேன்.

கொட்டும் மழையில் நீ என்னை திட்டும் வகையில் உன்னிடம் காதல் சொல்ல வந்தேன் ஆனால் திட்டாத நீ என்னை எட்டாத தூரத்திற்கு செல்லும்படியாக கட்டளையிட்டு விட்டாய் !

காகிதத்தில் காதல் எழுதி ஆகாயத்தில் பறந்திட செய்தேன் ஏனென்றால் என் இதயம் அன்பால் என்றும் உன்னை வட்டமிட்டு கொண்டிருப்பதை நீ அறியும் காலம் மிக விரைவில் கூடும்.

அண்டை வீட்டு பெண்ணாக உன்னை கண்ட நாள் முதல் என் வீட்டு பெண்ணாக உன்னை ஆக்கிக்கொள்ள துடியாய் துடிக்கிறேன் அதை அறியாத உன்னை காணும் பொழுது தவியாக தவித்து விடுகிறேன்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (5-Sep-16, 8:42 pm)
பார்வை : 168

மேலே