ஏன் இத்தனை மாற்றம்
ஏன் இத்தனை மாற்றம்
நம் மனங்களில் மட்டும்
ஏன் இந்தனை தோற்றம் ??!!
என் வீடு
என் பெற்றோர்
என் பிள்ளை
என் சொந்தம்
என உரைக்கும் உதடுகள்
என் தெரு
என் ஊரு
என் நாடு
என சிந்திக்க கூட
தவறியது ஏனோ ??
காந்தியையும்
கலாமையும்
ஈன்றெடுத்த பாரதம்
ஈர கண்களோடு
கனத்த நெஞ்சோடு
ஏக்கங்களை சுமந்துகொண்டு
வளர்ச்சி இல்லாமல்
ஊனத்தொடு
நடப்பது ஏனோ..??
நாடு என்பது
மலையும் மலைசார்ந்த இடமோ
கடலும் கடல் சார்ந்த இடமோ
வயலும் வயல் சார்ந்த இடமோ
மணலும் மணல் சார்ந்த இடமோ
இல்லை .....
மனிதனும் மனிதன்
மனம் சார்ந்த இடம் ...
மக்களும் மக்களின்
குணம் சார்ந்த இடம் ...
மனிதனை நேசிப்போம்
மனித நேயத்தை சுவாசிப்போம்
தேசத்தை வளர்க்க
அன்பை விதைப்போம்
என்றும்....என்றென்றும் ....
ஜீவன்