இதோடு அதுவல்ல நான்

ம் அல்லது இல்லை
உனக்கொன்றும் புதிதில்லை
அளிப்பதிலும் எடுப்பதிலும்
பல ம் களை கடந்து வந்தவன்தானே நீ
நியாயங்களும் தர்மங்களும் உனக்கே ஆனதாகட்டும் ஊருக்கானதாகவோ எனக்கானதாகவோ இருக்க வேண்டிய தேவை என்ன
திடுமென வினாக்களுடன் விழைவதும் திடுமென திசை மறைத்து ஓடுவதுமான உனது பைத்தியக்காரத்தனங்களுடன் சேர்ந்தேதான் உனை மதித்தேன்
எனினும் புதிதல்ல உனக்கு ...
எல்லோரும் எப்படியோ எனக்குத் தெரியாது
நான் எப்படி என்பதும் உனக்குத் தெரியாது
பதினொன்றோடு பத்தோ
இதோடு அதுவாகவோ நான் இருப்பதில்லை என்றும் எவ்விடத்திலும்
என் கண் அறிந்தவர் அறிவர் என் கண்
-அகராதி