சிற்பிகள்

சிற்பிகள்
ஃஃஃஃஃஃ

அ வின் வழி (அ என்ற எழுத்தின் வழி)
ஆசான் தோன்றினார்...
ஆய்த எழுத்தை
பாடத்தில் தந்தார்...
கணிதத்தில்
வாழ்க்கை சூத்திரம்
கற்றுத்தந்தார்...
அறிவியலில்
உலகை அளந்தார்...
வரலாற்றி்ன் வழி மனதில் வீரம்
விதைத்தார்...
தமிழின் மூலம் யாவையும்
பொழிந்தார்...
அகமும் புறமும் நீதியும்
நெஞ்சில் ஆழ விதைத்து வளர்த்தார்...

ஆசான்
என்பவர்
தாய் தந்தை
இருவரின்
ஓர் உருவம்...
நண்பனின்
அடைக்கலம்...

அல்லும் பகலும் தூங்காமல்
அடுத்த நாள் பாடம் நடத்த தினம் தினம்
தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்வார்...

உணவு இடைவேளை
ஓய்வு நேரம் என்றாலும்
தன் வலியை தூக்கி எறிந்து விட்டு
இன்முகத்தோடு
சந்தேகத்தை தீர்த்து வைப்பார்...

தன் மேனி எங்கும்
சுண்ணாம்பு சுமந்து
எங்களை(நம்மை) வெள்ளையடித்தார்...

நம் வெற்றியே
அவர் வெற்றியாகி
அதில் மகிழ்ச்சி காணுகிறார்
நெகிழ்ச்சி அடைகிறார்
பூரித்துப் போகிறார்...

உங்களின் தன்னலமற்ற
அன்பிற்கு
எங்களின்
அன்பை காணிக்கையாக்குகிறோம்
ஐயா/அம்மா...

பொருளுக்கு மட்டும்
பாடம் எடுக்காமல்
தீபத்தின் ஒளி போல்
எல்லோருக்கும் சமமாய்
பிரகாசத்தை அருளி...

மாணவனின் வழித் துணையாகி
தூக்கி விட்டு ...
நல் வழி காட்டி
வாழ்வில் முன்னேற ஊக்குவித்து
ஒழுக்க சீலனாய்
உலகிற்கு மனிதனை
உருவாக்கி தரும் சிற்பிகள் ஆசான்...

அப்படிபட்ட
ஒவ்வொரு(எல்லா) ஆசிரியருக்கும்...
என் சிரம் தாழ்த்தி ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை கூறுகிறேன்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Sep-16, 8:37 am)
Tanglish : sirpigal
பார்வை : 1053

மேலே