மாயம் முறித்து எடுத்த சில சிறகுகள் - 4
"என்ன உனக்கு
விருப்பமில்லையா ?"
நிலவு
உதிக்கும்
வரை
காத்திருப்போம்
இங்கேயே .......,!
இந்த
சோலையை
வெளிச்சமாகும் வரை
காத்திருப்போம் .............,
(-இது அவள்)
நான் சொன்னேன் :
மாயம்
செய்யும்
இருள்
மறைக்கும் போது
நாம் எதையும்
காண்பதற்கில்லை ............,
பிறகு அவள் சொன்னால் :
"இந்த இருள்
மாயம் செய்து
நம் கண்களில் இருந்து
மரங்களை இன்னும் பூக்களை
மறைத்த போதும் ,
நம் உள்ளங்களில்
இருக்கும்
அன்பை
மறைக்க முடியாது .,"