இயற்க்கை தந்த இனிய sugangal

இயற்கையை நாடி சென்றேன்

துன்பங்கள் எல்லாம் சற்றே மறந்திடவே


இயற்கை அன்னை என்னை எப்போதோ

எங்கோ துலைந்த பிள்ளை வீடு திரும்பினால்

என்ன இன்பம் அடைவாளோ அது போல்



என்னை வாரி அணைத்து தன மடியில் இருத்தினாள்

அவள் மடியில் அமர்ந்து கண்டேன் கண்டேன்

மனதிற்கு பசுமை தந்து இதம் தரும்

புல்வெளியும் பச்சை கொடியும் பசுமரங்களும்

அதில் தன்னை மறந்து இசைப் பாடும் குயில்கள் கூட்டமும்



அந்திசாய் வேளை தென்றல் வந்து வீச

மோகன சதங்கை ஒளி கேட்டேன் தெளிந்தேன்

அது அந்த சிற்றோடை நடை தந்த ஓசை என்று


அன்னை மடியை விட்டு (இயற்க்கை ) வந்தேன்

அங்கு புள்ளி மான்கள் கூட்டம்

கருமேகம் வந்து வானை மூட

தோகை மயில் ஒன்று முழுவதுமாய்

தன தோகை விரித்து நடன அரங்கேற்றம் செய்தது


வீடு திரும்பும் முன்னே அங்கே

அந்த சிறு குன்று தாங்கி வரும்

நீர் வீழ்ச்சியில் என்னை மறந்தேன்

மனம் குளிர ஆயாசம் எல்லாம் நீங்க

அருவி நீராடினேன் களிப்புற்றேன்


ஐயா ! பட்டணத்தில் ஜிம்மை தேடி

சென்று மன அழுத்தம் நீங்க ஏதேதோ செய்கிறோம்

பயன் பெரிதாய் இல்லை என்று தெளிகிறோம்


ஐயா இயற்கையுடன் ஒன்றி வாழ

கற்று கொள்ளுவோம் இயற்க்கை தாய்

நம் துயரங்கள் எல்லாம் நீக்கி

மனதில் இன்பமெல்லாம் சேர்ப்பாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Sep-16, 11:20 am)
பார்வை : 339

மேலே