மகள் பூச்செண்டு
மகளைப் பெற்ற ...
அப்பர்களின் ஏக்கங்கள் இதோ...!!!
மகளைப் பெற்ற அப்பாவுக்கு...
மகள் என்பவள் ...
மகள் மட்டுமல்ல...
மனதில் மலரும் மலருமே!..
இதயச் சோலைக்குள்...
இருப்பிடம் அமைத்து அதில்...
இறங்கி வருவாள்...
இதயத்திலே...
பூக்களும் கொஞ்சம்...
மலர மறுக்கும் உன்...
பூவிரல்கள் தீண்டிட துடிக்கும்!..
கிளிகளும் கொஞ்சிப் ..
பேசிட மறக்கும் உன்..
கிளிப்பேச்சு கேட்டு..
கொஞ்சிட துடிக்கும்!.
மேகத்தில் மிளிரும்...
விண்மீன்கள் கூட்டம் உன்...
கரங்களில் இறங்கி...
விளையாட நினைக்கும்..
மழைமேகங்கள் சூழ்ந்த ...
வானவில்லின் வண்ணங்கள் உன்...
பொன்னிறம் கண்டதும் தன்..
நிறம்மாற நினைக்கும்.../
நிலத்தில் படரும் ...
நெருஞ்சி முட்களும்..
உன் பொற்பாதங்கள் படர...
கொஞ்சம் வழிகொடுக்கும்...
தோகை விரிக்கும்...
மயிலும் கொஞ்சம் உன் ...
தேகம் உடுத்த...
ஆடை தரும்!...
சிறு பட்டாம்பூச்சிகள்...
சிறகடித்து வந்து உன்...
பட்டுக் கன்னங்களில்...
வண்ணம் தரும்...
உன் சிட்டுக்குருவி இருதயம்..
சிறகடித்து பறக்க...
வானமும் வழிவிட்டு ...
வரவேற்கும்...
எட்டாநிலவை நீ..
எட்டிப்பிடிக்க நினைக்கையில்...
வட்ட நிலவது நீ...
எட்டும் தூரத்தில் வந்து நிற்கும்.../
கார்முகில்கள் எல்லாம்...
தூரிகைகள் சுமந்து வந்து...
ஒவ்வொரு பூவிலும் உன் ...
ஓவியங்கள் தீட்டிடும்../
ஏனோ என்னிதயம்...
இடம்மாற நினைக்குது உன்...
நெஞ்சுக்குள் வந்து...
இளைப்பாற துடிக்குது.!
என் விழிகளிரண்டும்..
வழித்தடம் கேட்குது...
உன் விழிகளுக்குள் வந்திடும்...
விடியலை தேடி தவிக்குது.
என் நெஞ்சுக்கூட்டுக்குள் ...
வெற்றிடம் வந்து நிக்குது உன் ...
நினைவுகள் சுமக்க...
ஏங்கியே கிடக்குது...
உன் பஞ்சு பாதங்கள்...
நெஞ்சை மிதிக்க ...
பட்டு மெத்தையாய் ...
மாறிட தோணுது..///
வாழ்வே கொஞ்சம்...
வழிவிடு...
விழிகளின் ஏக்கம் களைந்திடு...///