உடல் வலிமை
உடல் வலிமை
*******************
நான்கு காலில் நடந்தவன்
இரண்டு காலில் நடக்கிறான்
பின் மூன்று காலில் நடக்கிறான்
இறுதியில் எட்டு காலில் நடக்கிறான்....
இவை எல்லாவற்றிற்கும்
காரணம்
உடலின் வலிமை...
உடல் வலிமை என்பது
மன வலிமையுடன் சேர்ந்ததே...
மன வலிமையில்லாமல்
உடல் வலிமை
வீணானது...
நாளை சாகப்போகிறோம்
என்று தெரிந்த பிறகு
தைரியத்தோடு
எதையும் எதிர்க்கொண்டால்
ஒருவேளை
நாளையும் கடக்கலாம்
இந்த ஞாலத்தையும் வென்றிடலாம்
எதையும் எதிர்பார்த்துச் செல்லக்கூடாது
எது வருகிறதோ
அதை எதிர்க்கொள்ள வேண்டும்
உடல் வலிமையினால்
மன வலிமையுடன்
உன்னால் முடியும்
உன்னால் முடியும்
என்பது மனவலிமை
அதை செய்து முடிப்பது
உடல் வலிமை
உடலில்
மனம் இருக்கிறது
அந்த மனதில்
தைரியம் இருக்கிறது
அதனால்
உடலில் வலிமை
இருக்கிறது
~ பிரபாவதி வீரமுத்து