முயற்சியாளர்கள்

கண்களை பிசைந்து நான்
கவிதை வடிக்கவில்லை - என்
மனதை கடைந்து உற்று எடுக்கறேன் -இது
ஆறாகி மாறி பின்பு கடலோடு கலந்து - என்
கவியூகத்தின் மூலம் இந்த அண்டம் ஆள ஆசைப்படுபவள் -இது
சற்று அதிகப்படியான ஆசையாக கூட இருக்கலாம்-ஆனால்
அடுத்தவர் படைப்பை அபகரித்து ஆகாயம் ஏற முயலவில்லை
என் கருத்தை கவி வழியாக கடந்து செல்ல நினைப்பவள்
வழியெங்கும் மலரும் மலர்களான நீங்கள் இன்றி எவர்
ஒருவரும் ஆகாயத்தை முத்தம்மிட முடியாது என்பதை -உணர்ந்தவள்
உங்களின் கருத்துயொளி ஓசையில்தான் என் கவியொளி இந்த அண்டத்தின் செவியொலி
பிளக்க முடியும் என்றால் முயன்றுபார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லையே- தோழமைகளே
ஆயிரம்ஆயிரம் கரங்களா ஒன்றிணைந்து -இந்த
எழுத்து.காம் என்ற நீர்விழ்ச்சில் -நாம்
அனைவரும் மூழ்கி முத்து எடுப்போம்........

எழுதியவர் : பிரபாவதி .ச (7-Sep-16, 3:57 pm)
சேர்த்தது : பிரபாவதி
பார்வை : 793

மேலே