வலி

இன்னும்கூட
ஒலித்துக்கொண்டிருக்கிறது
என்னைச் சுற்றிலும் அழுகுரல்

வந்த வேகத்தில்
தன் கடமை முடித்துச் சென்றன
காற்றும் மழையும்...

ஆடுமாடுகள் இவற்றினோடே
சில மனித உயிர்களையும்
இழுத்துச் சென்று
இரைத்துச் சென்று விட்டது
கணப்பொழுதில் காட்டாறு...

எங்கே எங்கே என்று தேடி
முடிவில்...
முட்புதர்களில் சிக்கிய குப்பைகளாய்
கண்டெடுக்கப்பட்ட சடலங்களில்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது
மரணத்தில் தப்பிய
உறவுகளின் ஓலம்.....

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (7-Sep-16, 8:01 pm)
Tanglish : uravukal
பார்வை : 65

மேலே