ஊடலின் சாரல்

பரந்த விரிந்த வானம் தனது சின்ன நிலவை புரிந்துகொள்ளவில்லை
என்னும் போது பெரியதாக கோபம் ஒன்றும் இல்லை -ஆனால்
ஒரு சில வருத்தத்துளிகள் மட்டும் வீசிவிட்டு
பல்லாயிரம் கோடி விண்மீனாக உன்னை சுற்றி வருவது
நீ ஏன் இன்னும் அறியவில்லை அன்பே
தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போல நீ
ஏன் என்னைவிட்டு விலகி நிற்கிறாய்
ரீங்காரம் இடும் வண்டு பூவை காயப்படுத்தியதாக கேள்வியுண்டோ -ஆனால்
நீ உன் சொற்கரத்தால் என்னை வலுவிழக்க செய்தாய்
உன் நிழல் கூட என்னை தழுவ மறுக்கிறது என்றாலும் கூட
உன் நினைவுகளை உடுத்தியபடி உயிர் வாழ்கிறேன்- ஏனெனில்
நீ என்றாவது ஒரு நாள் உன் ஊடலை களைவாய் என எண்ணியபடி ............

எழுதியவர் : prabavathi (8-Sep-16, 2:58 pm)
பார்வை : 121

மேலே