மௌனமே

தரையில் தொட்டணைக்கும் உயிரே...
தரணியெல்லாம் நீயே...

தவிக்கின்றேன்
தகிக்கின்றேன்
தாகம் தீர்த்திடு
இதழ் முத்தத்தால்


காதலை சொல்லிட வார்த்தை இல்லை என்னிடம்
ஊமையாகி நிற்கின்றேன்
கண்ணே

என்ன மௌனம்
இந்த மௌனம்
என்னை கொன்று விட்டுப்போகுதே

இதழோடு இதழ் வைத்து ஒட்டிக்கொள்ளடா
நெஞ்சோடு நெஞ்சு
கட்டிக்கொள்ளடா

கால விரயம்
கன்னி இவள்
மனது தாங்காது
கால தேவன்
கடத்திச் செல்ல பார்க்கின்றான்

உயிரே...
அன்றிலை காணாத
அன்றிலும் வாழுமோ?
நீ இன்றி நானும்
பிழைப்பேனோ?

எங்கு இருந்தாலும்
வந்து இவளை
அணைத்துக்கொள்
இல்லை மண்ணில்
போனாலும் இவளின்
மனம் தானே தாங்காதே

வாழ்வில் வசந்தம் வந்ததே...
என் உயிரும்
என்னோடு கலந்ததே...
அன்பே என்னாளும் என்னோடு
பேசட்டும் உன் மௌனம்


~ பிரபாவதி வீரமுத்து
( கணவருக்கு சமர்பிக்கிறேன்...)

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Sep-16, 3:23 pm)
Tanglish : mowname
பார்வை : 106

மேலே