உண்மையில் நாம் சுதந்திரம் பெறுவது எப்போது

மன்னர்கள் போராடி
மண்ணில் தோற்று
உறங்கும்போது
மகான்காந்தி உதித்து
மவுனப்போரால்
வெள்ளைமாந்தரை
வென்றார்!!!

தப்பித்தோம் பிழைத்தோம்
என்றெண்ணும் நாமும்
பூனைக்கு பயந்து
புலிகளிடம் மாட்டினோம்
புலி சில வரிகளை விதித்து
நம்மை விழி பிதுங்க
வழி செய்ததே -இதை
தான் நாம் பெருமையுடன்
கொண்டாடும் விடுதலை
நாள் விழாவோ !!!!

நம் தமிழகத்தில் இல்லாத
ஆறுகளா ? ஓடைகளா?
ஏரிகளா? குளங்களா?
குட்டைகளா? இத்தனையும்
தூர்த்துப் போட்டு அண்டை
மாநிலத்துடன் சண்டைபோட
மல்லுக்கு நிற்க வைத்த -நம்
மாநில அரசின் மகுடச்
சாதனைகளை பட்டியலிட்டு
கொண்டாடும் திருநாளோ
நம் குடியரசு விழா?

ஓட்டுக்கு காசு கொடுத்து -நம்மில்
பலரை செல்லாக் காசுகளாக்கிய
கில்லாடி அரசுக்கு கிரீடம்
சூட்டி கொண்டாடும் தீப
ஒளியோ ? நாம் கொண்டாடும்
கொடி நாள் விழா?

தேசிய விழாக்கள் கொண்டாடுவது
தேசத் தலைவர்களை நாம்
நினைவு கூர்ந்து நாமும்
அவர்கள் வழியைப் பின்பற்றவே !!
இன்று கொண்டாடும் தேசிய
விழாக்கள் சிலரது சாதனைகளை
பட்டியலிட்டு விளம்பரப்படுத்தவே


விழாமேடைகளில் விளம்பர படுத்தி
வந்த சில பிரம்மாண்ட பிரசுரங்கள்
நூல் நிலையங்களையும் விட்டுவிடாமல்
நிரப்பி நீங்கா இன்பம் காண்கின்றன !!

பள்ளிப் பிள்ளைகளுக்கு சில
இலவசங்களுடன் கூடிய
விளம்பரமும் , விபரமாய்
அச்சிட்டு கொடுத்து அக
மகிழ்வுடன் ஆட்சியை
நடத்தும் அரசுகளிடம் -நாம்
மீண்டும் ஓர் விடுதலை
பெறுவது எப்போது????????????????

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (8-Sep-16, 7:31 pm)
பார்வை : 277

மேலே