உயிர்க்கொடடி என் உயிரே
ஒருநொடிதானே உன்னைக் கடந்தேன்.
பித்தனாய் மாறி என்னை தொலைத்தேன்.
உன்பார்வை மழையில் நனைந்து
காதல் காய்ச்சலில் எரிகிறேன்.
எண்ணத்தை உன்னிடம் விண்ணப்பித்தும்
உன் மௌனத்தில் என்னை புதைக்கிறேன்.
காதலுக்கும் எனக்கும் பலமைல் இடைவெளி இருந்தது.
உனைக்கண்ட நாள் முதல் எனக்குள்ளே புது வலி பிறந்தது.
தரைநிலவாய் பக்கத்தில் நீ இருக்க,
பார்க்காத ஏக்கத்தில் பகல் இரவாய் நான் தவிக்க,
திரைஎன்னும் அச்சத்தை தீயிட்டு எரியடி..
அலை உன்னை தாங்குவேன்,நான் கரையாத கரையடி.
மாதங்கள் வருடமாய் மாறித்தான் போனது.உன்
பாதங்கள் என்றடி என் வீட்டை சேர்வது?
உன் துப்பட்டா காற்றிலே களிநடனம் போட.,
உன் பின்னே என் இதயம் தறிகெட்டு ஓட..
காதலை சொல்ல இத்தனை தயக்கமா?
ஆதவனை உன் இருகரம் மறைக்குமா?
என் வீட்டு சன்னலில் உன்முகம் பார்க்கிறேன்.
நிலவொளியில் நீயா!
உன்னொளியில் நிலவா!
விடைதெரியாமல் வியக்கிறேன்.
பூமிப்பந்து புதையப்போகிறதாம்.
மரணத்திற்குமுன்னே என்னை மணந்துக்கொள் பெண்ணே..