யார் உயர்ந்தவர்

பறவைகளை பார்

அன்று முதல் இன்று வரை

அவற்றில் மாற்றங்கள் ஏதும் இல்லை


மிருகங்களை பார்

அவற்றிலும் மாற்றங்கள் ஏதும் இல்லை


மனிதனைப் பார்

இவனா அந்த மனிதன்

என்று வியக்கும் வண்ணம்

அவனில் மாற்றங்கள்



கற்பனைப் பண்ணி பார்த்தேன்

இறைவன் பறக்க மனிதனுக்கும்

சிறகு தந்திருந்தால்

என்ன நடந்திருக்கும்

பறவைகள் போல் அவனும்

இருந்திருப்பான்

விமானம் படைத்திருக்க மாட்டான்

ராக்கெட்டில் சந்திரமண்டலம் சென்றிருக்க மாட்டான்

விண்ணிலே ஈசல்கள் போல் பறந்து

தன்னில் பாதி ஜனத் தொகை அழித்திருப்பான்

விலங்கைப் பார்த்த பின்னே

மனிதன் உணர்ந்தான் தான்

விலங்கை விட்டு மேம்பட்டவன் என்று

ஆறறிவு உணர்ந்தபின்னே மனிதன்

தன் ஆற்றலை செயல்படுத்தி

விஞானம் உணர்ந்து மேம்பட்டு

பெரும் இறுமாப்பு கொண்டு

தன்னை படைத்தவனையே மறந்து

தன்னையே கடவுளாக எண்ணுகிறான்


விந்தைதரும் இறைவன் படைப்பில்

இயற்கையோடு இயைந்த

பறவை மிருகங்கள் வாழ்வு மேலானதோ

தன்னை தானே அழித்து கொண்டு

இந்த உலகத்தையே அழிக்க உயர்ந்த

மனிதன் உயர்ந்தவனா



பறவை மிருகம் பேச தெரிந்தால்

இதற்கு நமக்கு விடை கிடைத்திருக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Sep-16, 11:23 am)
பார்வை : 152

மேலே