கணவா வந்துவிடு

வலி தாங்க முடியலடா...
உன்ன பிரிஞ்சி என்னால
இருக்க முடியாதுடா
செத்துடுவன்டா
நீ கிட்ட வர்றியா
இல்ல நான்
விட்டு ஒரேயடியாபோவா
உசுர விட்டு போய் சேரவா
செத்தா கூட
எனக்கெல்லாம் மோட்சமே இல்லடா
உன் மடியில
உன்ன பாத்துகிட்டே
போனாதானே...
ஏதோ ஒரு
மூலையில
எங்கேயோ
தூக்கிட்டு போய் எறிய போற
இந்த உசுரு
கடைசி வரைக்கும்
என் உசுரான உன்ன
பாக்காம போகலாமாடா...???
என்ன எதுக்குடா
கடவுள் படச்சாரு...
உனக்குள்ள வாழணும்
உன் கூடவே வாழணும்
உனக்குள்ளேயே மூழ்கிடணும்...
ஆனா இப்ப எங்கடா போன
முடியலடா
சீக்கிரம் வாடா...
உன்னோட மார்பெனும்
அரசாங்கத்தில் வீற்றிருக்கும் நான்
உன் மடி என்னும் பஞ்சு மெத்தையில்
தலை வைத்து தூங்க போகிறேன்...
உடனே வந்துவிடு நாதா..
நீயோ என்னை தூக்கத்திலேயே பார்க்க நேரிடும்...
நானோ எங்கிருந்து உன்னை பார்க்கக் கூடும்...???
~ உன் மனைவி பிரபாவதி வீரமுத்து