ஆச்சு- -கல்லு

என்னங்க நம்ம கொழந்தைங்க ரண்டு பேருக்கும் நம்ம ரண்டு பேருக்கும் பிடிச்ச ரொம்பச் சினன அழகான பேருங்களா வச்சிருக்கோம். உங்க அம்மா அந்தப் பேருங்கள ஆச்சு, கல்லு-ன்னு சொல்லறாங்க. எனக்கு அவுங்க பண்ணறது கொஞுசங்கூடப் பிடிக்கலீங்க.
@######
கோவிச்சுக்காத கண்மணி. அம்மா ரண்டாம் வகுப்புதாம் படிச்சிருக்காங்க. அவுங்க கிராமத்திலேயே வளந்தவங்க. அவுங்களுக்கு ஜ, ஷ,ஸ எல்லாம் உச்சரிக்க முடியாது.
@@@@@@
டேய் மெய்யழகா நீயும் உம் மனைவியும் என்னடா மெய்யழகா நீயும் உன்னோட மனைவியும் எதோ குசுகுசுன்னு பேசிட்டிருக்கறீங்க?
@@@@@
அம்மா அது வந்து..... எங்க பிள்ளைங்க ரண்டுபேரையும் பத்தித்தாம் பேசிட்டிருக்கிறோம்மா.
@@@@@@
அட எஞ் செல்லப் பேரன் ஆச்சு, செல்லப் பேத்தி கல்லுவைப் பத்தியா பேசிட்டு இருக்கறீங்க?
@@@@@@@@@@
அம்மா நாங்க காலத்துக்கு ஏத்த மாதிரி உம் பேரனுக்கும் பேத்திக்கும் மத்த தமிழர்கள் மாதிரி இந்திப் பேருங்கள வச்சிருக்கிறோம். அவுங்கப் பேருங்கள ஆஜ், கல்-ன்னுதாஞ் சொல்லணும். உங்களால அவுங்க பேருங்களச் சரியா உச்சரிக்க முடியாது. பரவால்லம்மா நீங்க அவுங்கள ஆச்சு, கல்லு-ன்னே கூப்புடுங்க.
@@@@@@
ஆமாண்டா முருகப்பா, இது கலி காலந்தானே. தாய் மொழிப்பேர வச்சா அது கேவலமாப் போயிடும். ஆனா இந்திக்காரங்க யாராவது அவுங்க கொழந்தைகளுக்குத் தமிழ்ப் பேர வச்சிருக்காங்களா? நேத்து அந்தத் தொலைக் காட்சிப் பொட்டில ஒருத்தரு பேசுனாரு. நம்ம தமிழு எப்ப உருவாச்சின்னு இன்னும் யாருக்கும் தெரியாதாம். இந்தி ஆயரம் வருசத்துக்கு முன்னாடி உருவான மொழியாம். இந்தி சமசுகிரதமும் வேற நாட்டு மொழி ஒன்னைங் கலந்த மொழின்னும் சொன்னாரு. இந்தி பேசறவங்களுக்கு சாயபுங்க பேசற மொழி புரியுமாம்
சாயபுமாருங்க பேசற மொழி இந்திக்காரங்களுக்குப் புரியுமாம். நம்ம தாய்மொழில பேரு வைக்காம இந்திப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வச்சு நம்ம மொழியைக் கேவலப்படுத்தக் கூடாதடா மெய்யழகா.
@@@@@@#
அம்மா...... வந்து நாஞ் சொல்ல.........
@@@@@@@
நீ எதையும் சொல்ல வேண்டான்டா மெய்யழகா. அதாங் காலத்துக்கு ஏத்தமாதிரின்னு சொல்லிட்டயே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (10-Sep-16, 9:44 pm)
பார்வை : 130
மேலே