23 ல் முதல் நாள்

உயிரளித்த என் தந்தையும்
உருவளித்த என் அன்னையும்
என்னைப்
இப்பைந்தமிழ் தோட்டத்தில்
தருவாக விதைத்தார்கள்...

பழகு தமிழ் பாலருந்தி
எளியவளாய் ...
புன்சிரிப்பால் தென்றல் வீசி
நிகழ்தமிழ் நடை பழகி
இன்றோடு
இருபத்திரண்டு வருடங்கள்
கழிந்துவிட்டன...

இதுவரை,,
இத்தோட்டத்தில்
எத்தனையோ தருக்கள்
கற்பக விருட்சகங்களாகியிருக்கின்றன.

சூழ்நிலையின் சதியால்
உழன்று விகாரமனவைகளும்
ஏராளம்....

இவ்விரு தருக்களும் உதவும்...
நமது நல்லெண்ண பார்வையால்!!!

கற்பக விருட்சகங்கள்
தெய்வங்களாகவும்

விகாரமனவைகளும்
சுள்ளிகளாகவும்....

எனது பார்வையும்
எனது எண்ணமும்
என்னைப் பொறுத்தது...

அதனை மேலும்,,,
பசுமையாக்கும் பொருட்டு
இருபத்திமூன்றாம் வருடத்தின்
முதல் நாளில்
அடியெடுத்து வைக்கிறேன்

வளரும் ஒரு தருவாக. ........

எழுதியவர் : மு.முருகேஸ் (12-Sep-16, 12:11 am)
பார்வை : 51

மேலே