மனிதனே மார்க்கத்தை மறக்காதே

என தருமை சகோதர, சகோதரிகளே ! மனிதநேயத்தை மிகவும் தெளிவாகவும், அழகாகவும் போதனை செய்யும் மார்க்கம், என்றும் உலகில் நிலைத்து நிற்கும் மார்க்கம் தான் “இஸ்லாம்”

என்பதை அல்குரான், ஹதீஸ், நபி வழிமுறைகள் போன்றவற்றை கற்றுக்கொண்ட பின் அதை எம்மாலும் ஏற்றுக்கொண்டு வாழவும் முடியும் என்பதை முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய சட்டதிட்டங்களை தங்களது சதித்திட்டங்களால் தோற்கடிக்கத் துடியாய் துடிக்கும் பிறமத கயவர்களது எண்ணம் ஒருபோதும் வெற்றியடைவதில்லை என்பதே இங்கு உண்மை

உலகின் இறுதி முடிவு வரும் வரையிலும் உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் சோதனைகள் அதிகமாக தான் இருக்கும் ஏனெனில் உண்மையான இறைவனை நம்பிக்கைக்கொண்டு வாழ்வதால்

ஷரிஆ என்பது இஸ்லாம் மார்க்கம் முஸ்லிம்களுக்காக இயற்றி சட்டத்திட்டங்களாகும் என்பதை முதலில் முஸ்லிம்கள் அறிந்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒரு விடயமாகும்.

“அதானின் அழைப்பு தொழுகையின் சிறப்பு நாளை மறுமையில் மனிதனுக்கோ பிறமிப்பு” என்ற கோட்பாட்டை நிச்சயமாக முஸ்லிமாகிய நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

உபதேசங்கள் என்ற பெயரில் மனிதனின் உயிரை எடுக்கும் வரையிலும் பேசும் சகமனிதர்களது சொல், செயல் போன்ற அனைத்தும் முதலில் சரியாக உள்ளதா ? என்பதை நாமும் அறியவேண்டும்.

உலகில் பிறந்து வாழும் அனைவரும் உத்தமர்கள் அல்ல என்பதை விளங்கி செய்யும் பாவங்களுக்கான பாவமன்னிப்பை இறைவனிடம் தொழுகையின் மூலம் மன்றாடி வரமாக இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (12-Sep-16, 9:51 pm)
பார்வை : 158

சிறந்த கவிதைகள்

மேலே