வேர்களைத் தேடி

ஆணிவேர் கொண்டுதான் தழைத்திடும்
ஊன்றிடும் விதையும் விளைந்திட ...
வேர்களைத் தேடித்தான் பாய்ந்தோடும்
ஊற்றிடும் நீரும் நிலத்தினில் ...
கருவறை ஒன்றே நமக்கெல்லாம்
கல்லறையில் அடங்கும் வரை
உயிர் அளித்த ஆணிவேராகும்
உலகில் நமக்கு வேராகும் ....
சாதிமதமென்று பிரித்து வைத்து
சாலைகளில் வெறி பிடித்து
அலைந்து திரிந்திடும் அறிவிலிக்கும்
அன்னை தானே ஆணிவேர் .....
மனைவி என்பவர் வந்தாலும்
மண்ணில் வாழும் நொடிவரை
மறுக்காது மறக்காது மனங்களும்
மாதாவெனும் மகத்துவ வேரை ...
அகவையும் கூடி அகிலத்தில்
உவகையும் பெருக உள்ளத்தில்
தலைமுறை கடந்து வாழ்ந்தாலும்
தாயன்றோ நமக்கு வேர் ....
கலிகால நிகழ்வுகள் கிலியூட்டுது
வன்முறை காட்சிகளால் கலங்குது
நடைமுறை மாற்றங்கள் நடுங்குது
யோசித்துப் பார்த்தால் தோன்றுது ....
கருவறை வேர்களைத் தேடி
அடைக்கலம் ஆவதே சிறந்ததென்று ...!
பழனி குமார்