ஒரு பக்க காதல் கதை பாகம்-05

மாதங்கள் மடமடவென கழிந்தன ..சடாரென இருவரும் சந்தித்த வேளையில் ..

அவள்: எதுவுமே நடக்காதமாதிரி நடிக்குறியே எப்படி ?

அவன்: (கடலில் குளித்து விளையாடிக்கொண்டே)..கெட்டது கழித்து நல்லது புகுதல் அதுதானே வாழ்க்கை

அவள்: கெட்டது நானா எங்க அப்பாவா?

அவன்: எங்களுக்கு இடையில பரிமாறப்பட்ட வார்த்தைகள் ..அதுதான் ..நாவினார் சுட்ட புண் தான் கொஞ்சநாள்ல ஆறிடுச்சு

அவள்: உனக்கு என்மேல காதல்னு நெனச்சேன், அன்னிக்கு அந்த காபிய முதல்லயே குடிச்சிட்டு போயிருக்கலாம்

அவன்: நடப்பவை நாடகமென்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் ...நா.முத்துக்குமார் ..நல்ல மனிதர்ல

அவள்: புரிஞ்சுகிட்டேன்..அழகு, பேச்சு இதையும் தாண்டி குணாதிசயம் தான் முக்கியம்..இல்ல ?

அவன்: அது எல்லாமே சூழ்நிலையாலும் சூழலாலும்தான் உருவாக்கப்படுது..இதுவரைக்கும் எத்தனைதடவை பீச்ல குளிச்சுருப்ப,50 தடவ?உன்னால முடிஞ்சதூரம் வரைக்கும் உள்ளபோயிருக்கியா?

அவள்: ஆசைகள் நிறையவே இருக்கு..நா பொண்ணாச்சே ..அப்பா, அண்ணன், தாத்தா..கணவன்..இத்தனை பூட்டு இருக்கு

அவன்: உங்க அப்பாக்கு நீ கரைத்தாண்டிடுவியோன்னு பயமில்லை, ஒருவேளை கரைத்தாண்டினா மூழ்கிடுவியோன்னு தான், உனக்கோ உன்கூட இருக்கபோறவங்களுக்கோ நல்லா நீச்சல் தெரியும்னு அவருக்கு நம்பிக்கை வரவரைக்கும் அவரால..வேடிக்கைதான் காட்ட முடியும் .....(என்று கூறி கடலிலிருந்து எழுந்து சென்றான் காலடிமண் பதிய)

அவள்: சிறிது யோசித்து அவன் நடந்த பாதையில் பாதம் பதித்தாள் கடலை நோக்கி ...

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (13-Sep-16, 10:33 am)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 394

மேலே