திருவரங்க தேவதை - 2
திருவரங்க தேவதை - 2
நேற்று மாலை கார்த்திக் தன் நண்பனுடன் செல்லும்போது ஒரு பெண்ணின் விழிப்பார்வை கண்டமுதல் காதலினுள் அகப்பட்டுக்கொண்டான்.
இனி,
கார்த்திக்கின் கனவில் எண்ணற்ற காதல் காட்சிக்குளத்தில் குளித்து வந்தது போல் எழுந்தான். இதுவரை அவனை அவன் அவ்வளவாக ரசித்து பார்த்ததில்லை, ஆனால் இன்று தன்னைத்தானே அழகாய் காண்கிறான். அவனின் ஒவ்வொரு பாகமும் அவள் ரசிப்பதற்காகவே என்று ஆழ்மனதில் பதிந்துபோயிற்று.அவன் நடையிலும் மாற்றம், புது அழகனாய் தன் வீட்டை விட்டு கிளம்பிய நேரம் காலை 8 மணி.கருப்பு சட்டையும் அதற்கு இளநீல ஜீன்ஸூம் அணிந்து நடந்து செல்லும் போது, அவளுக்கும் இந்த நிறங்கள் கண்டிப்பாய் பிடிக்கும் என்று மனதில் எண்ணிக்கொண்டு நடந்து செல்கிறான். இன்று அவளைப்பார்ப்போமா, வருவாளா, நிச்சயமாக இதே ஊர் தான் ஆனால் எந்த தெருவாக இருக்கும் என்ற யோசனையில் அவனை மறந்து நடக்கலானான், ஆனால் கால்களோ வழக்கம்போல் எதையும் கண்டுக்கொள்ளாமல் அந்த புலியமரத்து பேருந்து நிறுத்ததிற்கு வந்தடைந்தது.
நேற்றைய அவள் விழியின் தாக்கம் முழுமையான காதல் வலியை ஊட்டி மகிழ்ந்தது. எத்தனையோ பெண்களின் கண்கனை சந்திக்கிறோம் ஆனால் அவனுக்கு அவளின் ஒற்றை நொடிப்பார்வை இதுவரை கண்டிராத முதல் புது உணர்ச்சிகளின் மொழிகளுக்கு அடிமையாக்கி விட்டன. மதனும் ஏற்கனவே வந்து காத்திருந்தான், கார்த்திக்கை கண்டதும் "என்னடா இவ்வளவு சீக்கிரமா அதுவும் ஒரு மார்க்கமா இருக்க "என்று கேலியாய் கேட்டான்.காதல் வந்தால் ஹார்மோன்கள் அழகுக்கலை செய்யதொடங்கிவிடுமல்லவா???
கார்த்திக் புன்முறுவலை மட்டும் பதிலாய் தந்து,மதனிடம் "மச்சி நேத்து ரெண்டு பெண்களை பார்த்தோம்ள உனக்கு நினைவிருக்கா "என்று கேட்கிறான். மதனும் ஆமான்டா அதுக்கென்ன? கார்த்திக் "இல்லடா இதுக்கு முன்னாடி அவங்கள பார்த்துருக்கியா? "
மதனோ " இல்லையே ".மதனுக்கு தெரியாதென்பது கார்த்திக்கிற்கு நன்றாய் தெரியும்.அவளின் மீதுள்ள விருப்பத்தை தெரிவிக்க இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டியதாயிற்று.
எப்போதும் மதனிடம் நேரிடையாக பேசும் கார்த்திக் சற்று மறைமுகமாக புரிய வைக்க முயற்சிக்கிறான்.
இந்த காதல் வந்தவர்கள், நண்பனிடம் உதவி கேட்பதிலும் கூட மாறிதான் போய்விட்டார்கள்.
நண்பர்களின் உரையாடல் அவளை கண்டுபிடிக்கும் முடிவை எட்டிப்பிடிக்கும் வரை தொடருமல்லவா ...
மீண்டும் வந்து சேர்ந்துக்கொள்வோம் வரும் தொடரில் ..
தொடரும் ..
*மருதுபாண்டியன். க