எழுத்தின் கதை
கல்லில்
'சுழி' போட்டுத் துவங்கிய
உளியின் முதல் கையெழுத்து...
கல் படித்த கல்வி...!
எழுத்தாணிகள்
ஓலைகளில்
நெய்த "நூல்" ஆடை...
பிஞ்சு விரல்களின் முதல் கிறுக்கல்கள்...
பள்ளிக்கூட
'பலகை' களில் எழுதிப்
பழகிய
பல "கைகள்"...
அச்சில்
அரும்பிய
மொட்டுக்கள்...
காகித தோட்டத்தில்
பூத்த பூக்கள்...
மையிட்ட
'பேனா' பெண்
காகித காதலனின்
கன்னத்தில் இட்ட
முத்தங்கள்...!
இன்று
இணைய வானத்தின்
கண்ணாடி திரைகளில்
கண் சிமிட்டும்
வண்ண நட்சத்திரங்கள்....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
