கடல்நதி

மலைகளில் தோன்றிய
நதி கடலை சேர்வதினால்
மறைவது இல்லை

நதியும் கடலில் நதியாய்
இருப்பேன் என்று
நினைப்பதும் இல்லை

கடலும் தன்னை அடைந்த
நதியை தனக்குள் என்றும்
அடைப்பதும் இல்லை

முகில்களில் அனுப்பி
பிறந்து பிரிந்த
மலைகளில் மீண்டுமொருமுறை
தவழ வைப்பான்

பிரிந்த தன்னாவி
தன்னோடு சேரும் நாளை
அலையோடி கரை பார்த்திருப்பான்

- நீலாவதி

எழுதியவர் : நீலாவதி (13-Sep-16, 11:24 pm)
பார்வை : 73

மேலே