புவனேஷ்வரன் நீலாவதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : புவனேஷ்வரன் நீலாவதி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 16-Jun-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 19 |
மலைகளில் தோன்றிய
நதி கடலை சேர்வதினால்
மறைவது இல்லை
நதியும் கடலில் நதியாய்
இருப்பேன் என்று
நினைப்பதும் இல்லை
கடலும் தன்னை அடைந்த
நதியை தனக்குள் என்றும்
அடைப்பதும் இல்லை
முகில்களில் அனுப்பி
பிறந்து பிரிந்த
மலைகளில் மீண்டுமொருமுறை
தவழ வைப்பான்
பிரிந்த தன்னாவி
தன்னோடு சேரும் நாளை
அலையோடி கரை பார்த்திருப்பான்
- நீலாவதி
மலைகளில் தோன்றிய
நதி கடலை சேர்வதினால்
மறைவது இல்லை
நதியும் கடலில் நதியாய்
இருப்பேன் என்று
நினைப்பதும் இல்லை
கடலும் தன்னை அடைந்த
நதியை தனக்குள் என்றும்
அடைப்பதும் இல்லை
முகில்களில் அனுப்பி
பிறந்து பிரிந்த
மலைகளில் மீண்டுமொருமுறை
தவழ வைப்பான்
பிரிந்த தன்னாவி
தன்னோடு சேரும் நாளை
அலையோடி கரை பார்த்திருப்பான்
- நீலாவதி
நெடுந்தூரமோடிய அலுப்போ;
பாதியில் நின்ற ஒட்டப்பந்தயவீரன்
வாங்கிய மூச்சுக்காற்று
தெருக்குழாயில்!
வண்ணக்கோலங்களில்
புத்தாடை அணியப்பட்ட வேந்தர்களாய்
வலம்வந்த சாலைகள்
தேர்தல் முடிவுற்று
மறக்கப்பட்ட மக்கற்போல்
ஏனோ கவனிப்பாரற்று
மார்கழி மறைந்து!
நெடுந்தூரமோடிய அலுப்போ;
பாதியில் நின்ற ஒட்டப்பந்தயவீரன்
வாங்கிய மூச்சுக்காற்று
தெருக்குழாயில்!
இருவிரலிடுக்கில் தஞ்சம்;
இதழ்ப்பிரியா முத்தம்;
உருகி கலந்தாய்
மூச்சுக்காற்றில் கொஞ்சம்;
பேரின்ப மாயை
விட்டுசென்ற நஞ்சும்;
பாசக்கயிரானது
காலன் கண்டுபிடுப்பின் வஞ்சம்.
யாரைக்கண்டு நாணியதோ
குணிந்த தலை நிமிராமல்
தெரு விளக்கு!
உறங்கிய சூரியனின்
ஒளியை களவாடி
பூமிக்கு கொடுக்கும்
ராபின்ஹூட் - நிலா