சூடு காடாய் போன நாடு
இறைவா என்ன
கொடூரம் இது
இங்கே மனித நேயம்
எங்கே போனது ??
இயற்கை மனிதனுக்கு
கொடுத்த நீருக்கும் ,
நிலத்துக்கும் ,
வேலி போடும்
கேலி மனிதர்கள் வாழும்
நாடு எப்படி நாடாகும் !! ??
கலாம் கண்ட கனவு எல்லாம்
கலைந்தல்லவா போகும் ??.
ஓர் இந்தியா என்று
பறை சாற்றினாலும்
மொழியாலும் ..
இனத்தாலும் ..நாம்
இன்னும் பிரிந்தே
கிடக்கின்றோம் என்பதற்கு
இது போதும் சான்று ..!!
மொழி என்பது
உணர்வுகளை வெளிப்படுத்த
கடவுள் கொடுத்த வரம்
அது இடத்துக்கு இடம் மாறும்
அதனால் நமக்குள்
ஏன் இந்தனை கலவரம்???!!!!
அசிங்கம்
அவமானம்
வெட்கம்
வேதனை
உலகிலையே
நீருக்காக
ஒரு நாட்டுக்குள்
தீ பற்றி எறிவதும்
மனிதன் மனிதனை
கொல்வதும்
இன வெறி பிடித்து
அலைவதும்
இந்தியாவில்தான் என்று
நினைக்கும் பொழுது
இதயம் வெடிக்கிறது
மகான்கள் பலர்
கண்ட பூமி -இன்று
சில மதி இழந்த
மனிதர்களால்
உலகரங்கில்
தலை குனிந்து
நிற்கிறது ...
மூடனே இயற்க்கை
சிரித்தால்
நீயே நினைத்தாலும்
மூட முடியாது அணையை!!!
சிரிக்குமுன் சிந்திக்கொள்
மனிதனை
மனிதனாக நேசி
இங்கு வசிக்கும் யாவரும்
இந்தியர்கள் என யோசி ...
என்றும் ..என்றென்றும்..