உனக்கு ஒரு கடிதம் எழுத ஆசை

உனக்கு ஒரு கடிதம் எழுத ஆசை
==============================================ருத்ரா

உனக்கு ஒரு கடிதம் எழுத ஆசை

நான் இங்கு நலமே
நீ அங்கு நலமா?
உன் ஐ ப்ரோ பென்சில்
உன் கண்ணில் என்ன எழுதுகிறது?
நான் உன் கண் கமிராவில் படும்படி
ஒரு ரோஜாப்பூவை நீட்டினேனே
அதை எழுதியதா?
என் கண்விழி கோலிகுண்டுவைக்கொண்டு
உன் விழியின் பளிங்குக்குண்டோடு
கோலி விளையடியதை படம் வரைந்ததா?
சரி
அந்த பென்சில் வேண்டாம் உனக்கு!
என் இதயத்தை சுருட்டி வார்த்து
ஒரு பென்சில் ஆக்கி
அநிச்ச மலர் இதழ் செருகி
அனுப்பிவைக்கிறேன்.
நீ எழுதுவது எல்லாம் இனி
என் நெஞ்சின் இ.சி.ஜி.
அந்த அலைச்சுருள் படங்களில்
உன் கேசச்சுருள் "மார்ஃப்" செய்யப்படிருக்கிறதே
பார்த்தாயா?
இனி அடுத்த கடிதம்
உன் தூக்கம் கலைத்து படுக்கை விரிக்கும்.
தூங்கா விழிக்குள் எரியட்டும் இனியதொரு
தூங்கா விளக்கு

இப்படிக்கு
உன் நான்.

===========================================

எழுதியவர் : ருத்ரா (14-Sep-16, 12:54 pm)
பார்வை : 73

மேலே