எந்தன் மனதில் உந்தன் முகவரி

ஆழியில் சிற்பிக்குள் இருக்கும் அற்புத முத்து நீ ...
அலைகள் உன்னை மோதியும்
உயிர்கள் உன்னை தாக்கியும்
சீற்றங்கள் உன்னை தண்டித்தும்
மாற்றம் ஒன்றும் இன்றி - உன்
காயங்களை நெஞ்சுக்குள் மறைத்து
ஆயிரம் கற்களைக் கொண்டு செய்த
"மனப்பாறையாய் " - உன்
ஒட்டுமொத்த அழகையும் உனக்குள் பூட்டி - உன்
மனம் எனும் பாறையில் மறைத்து
இருட்டறைக்குள் நின்று - உன்னை
திறக்கவும் விடாமல், தொடவும் முடியாமல்
வெளிச்சம் காண நீயும் வராமல் - ஒரு
வட்டத்திற்குள் நிற்கும் அழகு சிற்பம் நீ ....

"ஏன் என்னை தண்டிக்கிறாய்"

உன் வெளிச்சம் என் மேல் வீச - உன்
அழகை கண்டா நான் - உன்னை
எடுக்க நினைத்தால் நான் மூழ்கி விடுவேன்!
விட்டுவிட்டால் நீ மண்ணுக்குள் மறந்து விடுவாய்!

"உன்னை தொடவும் தெரியாமல் ..
உன்னை விடவும் முடியாமல் ...
அலைப்பாயும் என் மனம்" ....

உன் முகவரி காண ஆசை அன்பே - ஏன்
முகவரி கொடுக்க மறுக்கிறாய் என் அன்பே ...... !

எழுதியவர் : M . சரண்யா (14-Sep-16, 5:52 pm)
பார்வை : 95

மேலே