துணிந்து போராடு .....

என்றோ ஒரு நாள்
எல்லா தொடக்கமும்
முடிவுக்கு வரும்.

எல்லா முடிவுக்கு பின்னும்
ஏதோ ஒரு தொடக்கம் இருக்கும்.

வாழ்வில் எந்த ஒன்றுக்குமே
எப்போது தொடக்கம்,
எப்போது முடிவு
யாருக்கும் தெரியாது.

தொடங்கியபின் முடிக்கும்வரை
எல்லோருக்கும் எல்லாம் தெரிகிறது.
ஆனால், அதில் எல்லாமே புரிவதில்லை.
அதில் சரியெது, தவறெது என்று
எல்லாம் தெரியாது.

யாருக்கு பிறந்து
யாரால் இறப்போம்
முன்பே தெரியாது.

நாளுக்கு நாட்கள்
நம் வாழ்வின் நாட்கள்
நம்மைவிட்டு பிரிவது
நமக்கே தெரியாது.

அறிவதும் தெரிவதும்
ஆண்டவன் ஒருவனே!
அவனின்றி யாரும்
அனைத்தையும் அறிவது
என்றும் முடியாது.

வாழ்வில் வாழும்வரை
நன்மைக்காக துணிந்து போராடு
என்றும் வெற்றி உன்னோடு!

எழுதியவர் : வென்றான் (29-Jun-11, 5:00 pm)
Tanglish : thuninthu poraadu
பார்வை : 558

மேலே