பாசம்

நேசத்தின் தேசம் - பாசம்

உயிர்களிடத்து உள்ளத்தின்
ஆத்மார்த்த பாஷை - பாசம்...

உறவுகளிடத்து அன்பின்
உன்னத பாலம் - பாசம்...

புண்மனம் நனைத்து பொன்மணம்
வீசும் பூமழை - பாசம்...

பாகுபாடு பார்க்காத
பரஸ்பர பரிமாற்றம் - பாசம்...

கடுங்கோபம் கலைத்து நெடுநேசம் வளர்க்கும்
கருணையின் கோவில் - பாசம்...

மதவெறி கடந்து மனநெறி
போதிக்கும் பொக்கிஷம் - பாசம்...

தெவிட்டாத அமுதும்
திகட்டாத அன்பும் பாசத்தின் அடையாளம்...

பசிக்கு ஏங்கும் நிலை வந்தாலும்
பாசத்திற்கு ஏங்காத நிலை வேண்டும்.

ச.சதீஷ்குமார் அமுதவேணி

எழுதியவர் : ச.சதீஷ்குமார் அமுதவேணி (17-Sep-16, 11:32 pm)
Tanglish : paasam
பார்வை : 125

மேலே