வேண்டும் விடுதலை
அந்நியரை வெளியேற்றி
சுதந்திரம் அடைந்தோம்
நமக்குள் அந்நியரானோம்
பல சமஸ்தானங்களை
ஒன்றிணைத்து
தேசமாக்கினோம்
நமக்குள் நேசம் இழந்தோம்
அனைத்து தாதுக்களையும்
அதிகமாக ஏற்றுமதி செய்யும்
தேசத்தில்
மக்களின் ஊட்டச்சத்து
குறைபாடு அதிகம்
காஷ்மீர் முதல் குமரி வரை
சாலை உள்ள இந்நாட்டீல்தான்
தன் மனைவின் சவத்தை
ஓர் கணவன் தோளில்
சுமந்து நடந்தான்
தண்ணீருக்கும்
சிறுநீருக்கும் காசு
கேட்கும் தேசம் இது
நம்பிக்கை வைத்து
மாறி மாறி வாக்களித்து
ரேகை அழிந்ததுதான்
மிச்சம்
வேண்டாம் இத்தகைய
சுதந்திரம்
வேண்டும் விடுதலை.