இன்றைய பெண்கள்
உதட்டில் சாயம்
உடைகள் மாயம்
வார்த்தையில் வேஷம்
உண்மையில் மோக்ஷம்
காதில் கடுக்கன்
முகத்தில் கடுப்பு
மதுரையை எரித்தாள் கண்ணகி
அக்காலத்தில்... கணவனையே
தூக்கி எறிகிறாள்
இக்காலத்தில்...
காதலனை அறைகிறாள்
கணவனை உதைக்கிறாள்...
பெத்தவளை தவிக்க விடுகிறாள்...
சுயநலமாய் ஓடுகிறாள்
பணத்தின் காலடியில்...
கற்றால் மூளை வளர வேண்டும்
மதியாமை மிளிர்கிறதே...
இக்கால பெண்களிடம்...
டெலிபோன் மணிபோல்
சிரிப்பவள் இவளா...
இன்று டெலிபோன்
போட்டு உடைப்பவள்
இவளா...
படையப்பாவுக்கு ஒரு
நீலாம்பரிபோல் வீட்டுக்கு
வீடு ஒரு நீலாம்பரி...
பெண்கள் நடமாடும்
தெய்வம்...
கடவுளின் பிறப்பு
பெண்கள்...
படைக்கும் தொழில்
செய்யும் பிரம்மன்...
என்று புகழாரம்
தொடுத்தாலோ மிதம்
மிஞ்சிய அடங்கா
குணம்...