காதல்
கடற்கரை மணலில்
கால் பதித்து
நடந்த வேளையும்
கடல் அலையில்
கால் நனைத்து
விளையாடிய வேளையும்
அந்தி சாயும் நேரம்
ஆதவன் மறையும் அழகை
ரசித்த வேளையும்
நினைத்து பார்க்கும்
வேளையில் நீ
எங்கு சென்றாய்
என்னவளே
உனக்காக காத்திருக்கும்
உன் காதலன் ...