கொன்றையும் கனியும்

சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான்தன் பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.

தெளிவுரை : தன்னுடைய திருமுடியின் மேல் வலப்பக்கத்தில் அந்த அழகிய பிறையை வைத்த சிவபெருமானுடைய ஒரு பாதியில் எழுந்தருளியிருக்கும் உயர் குலப் பெண்ணாகிய உமாதேவியின் கருமையான கூந்தல் கற்றைகள் இறைவன் சடையின்மேல் குடியிருக்கும் அந்தக் கொன்றை மலர்கள் முதிர்ந்து உண்டாக்கிய கனிகள் உருவாகி வந்து பக்கத்தில் சார்ந்து கீழே தொங்குவன போலத் தோன்றும். கொன்றைக் கனிகள் கரியனவாய் நீண்டு தொங்குபவை உமாதேவியின் குழற் சடை போன்றன என்பதாம்

எழுதியவர் : (21-Sep-16, 1:58 pm)
பார்வை : 51

மேலே